nannari-root-benefits-for-kidney-1
IMG-20220424-WA0005
nannari-root-benefits-for-kidney-1
IMG-20220424-WA0005
On Call
  • April 25, 2022 5:21 am
  • மட்டக்களப்பு
  • 1,153 views
  • சுய தொழில் - வியாபாரம்
நன்னாரி வேர் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தனித்து உடம்பை உரமாக்கக் கூடிய தன்மை உடையது.
ஒற்றை தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல  மருந்தாகும்.
நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு  இருமல் ஆகியவை தீரும்.
நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.