ed5a134e-32ee-44f8-8c4e-9498ae554dec
300(Fixed)
  • December 11, 2022 11:56 am
  • யாழ்ப்பாணம்
  • 762 views
  • விற்பனைக்கு

மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை.
“பிள்ளையைப் பெத்தா கண்ணீர்;
தென்னையைப் பெத்தா இளநீரு” என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.
தென்னை மரத்தை பற்றி பார்ப்போம்.
வளர் இயல்பு:
“ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்“
தாவரவியல் பெயர் :கோக்கஸ் நியூசிஃபெரா (Cocos nucifera L.)
குடும்பம் :எரிக்கேசியோ (ARECACEAE)
மணற்பாங்கான நிலத்தின் வளரவல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரிய ஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
தென்னை வளர்ப்பு:
“வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம், அதிலும் தென்னையை வளர்ப்போம்“
உலகில் ,தென்னை 80-க்கு மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்படுகிறது. தென்னையில் கிடைக்கும் தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.இந்தியா, இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. 15-30 மீட்டர் உயரமாக வளரும்.தென்னை எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது.