*Minoxidil இனை எவ்வாறு பயன்படுத்துவது?*
– உங்கள் முடி மற்றும் உச்சந்தலை உலர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். (ஒவ்வொரு பயன்பாட்டிற்கு முன்னரும் நீங்கள் ஷாம்பு தேய்த்து குளிக்க வேண்டியதில்லை).
– ஒரு துளியினை (1ML) சரியாக Dropper ல் நிரப்பவும் (ஒரு டோஸ்).
– உங்கள் தலையில் ஐந்து முதல் ஆறு பாகங்களை உருவாக்கி, ஒவ்வொரு பகுதி வரியிலும் ஒரு சொட்டு தடவவும். உங்கள் தலை முழுவதற்கும் 1ml போதுமானது.
பயன்படுத்தியவுடன், நீங்கள் அதை தேய்த்து Massage செய்யவும்.
– பயன்படுத்திய பிறகு குறைந்தது நான்கு மணிநேரத்திற்கு உங்கள் தலைமுடியை ஈரமாக்குவதைத் தவிர்க்கவும்.
– ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் Minoxidil பாவிப்பதன் மூலம் 2-4 மாதங்களில் உங்கள் தலைமுடி வளர்ச்சியில் மாற்றத்தினை எதிர்பார்க்கலாம்.
*Minoxidil பாவனையின் பக்கவிளைவுகள்.*
Minoxidil ஆனது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்தாகும். இருப்பினும், மற்ற மருந்துகளைப் போலவே, இது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
மினாக்ஸிடிலின் மிகவும் பொதுவான பக்க விளைவுகள் தோல் எரிச்சல், வறட்சி, செதில்களாதல் மற்றும் அரிப்பு ஆகும். மினாக்ஸிடில் பயன்படுத்திய பிறகு இந்த பக்கவிளைவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், உங்கள் குடும்ப சுகாதீர வைத்தியரை நாடவும்.